எப்.முபாரக்-
திருகோணமலை நான்காம் கட்டைப் பகுதியில் வானொன்றும் விமானப்படைக்குச் சொந்தமான பஸ்ஸும் நேற்று புதன்கிழமை(17) மாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர்கள் இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப்படை வீரர்கள் இருவரும் சீனக்குடா விமானப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த வானில் பயணித்தவர்களான எல்.எச்.லஹிறு (வயது 25), ஏ.எச்.என்.பீ.சசித குமார (வயது 22) ஆகியோர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
