மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடிய நுவரெலியா சிறுவன் நீரில் மூழ்கி பலி..!

க.கிஷாந்தன்-
ஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இச் சம்பவம் (27.02.2016) அன்று சனிக்கிழமை முற்பகல் இடம் பெற்றுள்ளது.

நல்லதண்ணி கிரீட்டன் தோட்டத்தில் உறவினர் வீட்டிற்கு வந்த இவா் 27.02.2016 அன்று பிற்பகல் வேளையில் தனியாக நீராடச் சென்றுள்ளார்.

அதன் பின் இவர் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென காணாமல் போயுள்ளதாக அப்பிரதேசத்தில் இருந்த பிரதேசவாசிகள் நல்லதண்ணி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நீர்தேக்கத்தில் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுப்பட்ட போது சுமார் 2 மணித்தியாலயங்களின் பின் சடலத்தை நீர்தேக்கத்திலிருந்து மீட்டுள்ளனா்.

இவ்வாறு உயிரிழந்தவா் நுவரெலியா கந்தப்பளை கோட்ஹில் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஜே. நரேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.

குறித்த இளைஞன் 26.02.2016 அன்று நுவரெலியாவிலிருந்து மஸ்கெலியா கிரீட்டன் பகுதியில் உறவினரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -