காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் அரசு தடை...!

பிப்ரவரி 14–ந் தேதி காதலர் தினம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவர்கள் மூலம் தடை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -