மடவளை ரெந்தபொல ( KTT வீட்டருகில் ) இடம்பெற்ற விபத்தில் சிலர் காயமடைந்ததுடன் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வருகிறது.
வத்தேகம பகுதியில் இருந்து வந்த வேன் ஒன்றும் கண்டியில் இருந்து வந்த CTB பஸ் ஒன்றும் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பஸ் சாரதி ஓவர்டேக் செய்த போது இரு வண்டிகளும் கட்டுப்பாடை இழந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. இதனை தொடர்ந்து பஸ் சாரதி பஸ்ஸில் இருந்து இறங்கி தப்பிச் சென்று வத்தேகம போலீசில் சரணடைந்துள்ளார்.
அத்துடன் கண்டி - வத்தேகம வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் அடைந்ததை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சாரதியை கூட்டி வந்து பஸ் வண்டியை அவ்விடத்தில் இருந்து அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளனர்.
வேனில் வந்த சிலருக்கு காயம் ஏற்பட்டதுடன், சாரதியியை பஸ் வண்டி நேரடியாக மோதியதால் அவரின் இடுப்பின் கீழ சம்பூர்ணமாக நொறுங்கியுள்ளதாக சம்பவ இடத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர்,
வத்தேகம போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




