மாத்தறை உளந்தாவ தோட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன சகிதம் விஜயம் செய்திருந்தார். அவர்களை தோட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். சுமார் 20 வருடங்களுக்கப் பின்னர் தமிழ் அமைச்சர் ஒருவர் இப் பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இங்கு அமைச்சர் திகாம்பரம் மக்கள் மத்தியில் பேசுகையில்,
இங்குள்ள தொழிலாள குடும்பங்களுக்கு தமது அமைச்சின் மூலம் 50 வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார். முதற் கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் பிறந்த தினமான மார்ச் மாதம் 17 ஆந் திகதி 25 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாத்தறை மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், இங்குள்ள மக்களின் கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.