Airtel and Dialog ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம்...!



இலங்கையிலுள்ள டயலொக் நிறுவனமும், எயார்டெல் நிறுவனமும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Economic Times எனும் பொருளியல் சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

டயலொக் நிறுவனம் இந்நாட்டில் 10.5 மில்லியன் தொடர்பாளர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சந்தையில் 41 வீதத்தை தம்மிடம் வைத்துள்ளது.

எயார்டெல் நிறுவனம் 2.3 மில்லியன் தொடர்பாளர்களை தம்மிடம் வைத்துள்ளது. இலங்கையின் தொலைத் தொடர்பு சந்தையில் 9 வீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் ஒன்றிணைவதன் மூலம் 50 வீதமான வாடிக்கையாளர்களை தம்வசம் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு டயலொக் நிறுவனத்துக்குக் கிடைப்பதாகவும் அச்சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -