6 தேரர்கள் உட்பட 11 பேருக்கு விளக்கமறியல் - ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஆறு தேரர்கள் உள்ளிட்ட 11 பேரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் காவி உடை அணிந்த பலர் நீதிமன்ற வளாகத்தில் கலகம் விளைவித்தனர்.

இதனை அடுத்து இவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி தேரர்களில் நேற்று ஹோமாகம பொலிஸில் சரணடைந்த ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -