என்னை மீண்டும் கைது செய்யும் அறிகுறி - பசில் ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மனு

திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி, முறையற்ற நிதிப் பயன்பாடு என்பன இடம்பெற்றுள்ளதாக பொய்யான முறைப்பாடுகள் பல தொடர்பில் தனக்கு எதிராக கம்பஹா, கடுவெல மற்றும் பூகொட நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளினால், தனது தனிப்பட்ட சுதந்திரத்துக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் பிரதிவாதியாக பொலிஸ் மா அதிபர், நிதி மோசடிப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பொய்யான தகவல்களின் அடிப்படையில் காணப்படும் முறைப்பாடுகளை வைத்து தன்னை மீண்டும் கைது செய்யும் அறிகுறிகள் காணப்படுவதாகவும், எனவே, இந்த வழக்கு விசாரணைகளை செயற்படுத்தாதிருக்க பணிப்புரை வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ இந்த மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -