பதுளை பள்ளகட்டுவை பகுதியில் 41 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் கையளிப்பு

க.கிஷாந்தன்-

இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பதுளை பள்ளகட்டுவை பகுதியில் 41 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 22.02.2016 அன்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் பதுளை பள்ளகட்டுவை தோட்டத்தில் 41 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு “சுப்பையா புரம்” என பெயர் சூட்டி வீடுகள் 22.02.2016 அன்று கையளிக்கப்பட்டது.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ் மற்றும் அரவிந்தகுமார், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -