கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கத்தை யாராலும் குறைக்க முடியாது - லாஹிர் MPC

எப்.முபாரக்-
கிழக்கு மாகாணத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கத்தையும் மக்கள் பிரதிநிதித்துவத்தையும் ஒரு போதும் யாராலும் எந்தக் கட்சியாலும் குறைத்துக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். மூதூர் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) மாலையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசம் திகழ்கின்றது.எதிர் வருகின்ற உள்ளூராட்சித் மன்றத் தேர்தல்களின் போது முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் இன்னும் வளர்ச்சியடையும்.

அத்தோடு எமது மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறையினை கட்சியின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் நிவர்த்திசெய்துள்ளார் கட்சியின் வளர்ச்சியை மேலோங்க வைக்க அனைத்து கட்சி ஆதரவாளர்களும் திடசங்கற்பம் பூன வேண்டும் ஊடகங்களில் சில தீய சக்திகள் தவரான கருத்துகளை பரைப்பி வருவதாகவும் அறிய கிடைக்கின்றது அதனை நம்ப வேண்டாம் என்றும் கட்சி ஆதரவாளர்களை வலியுறுத்தினார். அத்தோடு திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -