இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு I.S.I.S பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் – சவூதி தலைமை முப்தி.

ஊதி அரேபியா தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினை தோற்கடிக்கும் என சஊதியின் தலைமை மார்க்க அறிஞர் ஷெய்க் அப்துல் அஸீஸ் அல்-அஷ்ஷெய்க் திங்களன்று தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இஸ்ரேலிய இராணுவத்தின் ஒரு பகுதிதான் என அவர் குற்றம் சாட்டினார்.

சஊதி கெஸட் இணையத்தளத்துடனான தொலைபேசி உரையாடலின் போது தலைமை முப்தி இந்த கருத்துக்களை தெரிவித்ததுடன், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாரிய தீங்கினை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

“அவர்களை இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் என கருத முடியாது. முஸ்லிம் என்கிற லேபலை வைத்துக் கொண்டு முதற்தடவையாக இஸ்லாமிய கிலாபத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து முஸ்லிம்களை கொன்று அவர்களின் இரத்தத்தினை சிந்த வைத்து இஸ்லாத்தினை விட்டும் வெளியேறிய கவாரிஜ்களின் சந்ததியினர்தான் இவர்கள் எனவும் தெரிவித்தார்.”

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரினால் அண்மையில் இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக தலைமை மார்க்க அறிஞர் சொல்லும்போது “இஸ்ரேலுக்க எதிரான இந்த அச்சுறுத்தல் அவர்களின் வழக்கமான பொய்களில் ஒன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்ரேலிய இராணுவத்தின் ஒரு பகுதிதான்” என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -