வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக யோசித்த ராஜபக்ச கைது...?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித்த ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாகவே, யோசித்த ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

யோசித்த ராஜபக்சவுக்கும், வசீம் தாஜுதீனுக்கும் இடையில் நிலவிய பனிப்போரின் காரணமாகவே, இந்தக் கொலை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -