அட்டனில் பொலிஸ் நடமாடும் சேவை..!

க.கிஷாந்தன்-
ட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவையொன்று 10.01.2016 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அட்டன் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையில் பொலிஸ் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், முறைப்பாட்டு பதிவுகளை பெற்றுக்கொடுத்தல், அடையாள அட்டைக்கான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பெற்றுக்கொடுத்தல், அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை நிரப்புதல், பதிவுகளை பெற்றுக்கொள்ளல், பிறப்பு அத்தாட்சி பத்திரத்திற்கான பதிவுகளை மேற்கொள்ளல், வைத்திய முகாம் போன்ற பல்வேறு சேவைகள் இங்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன.

இந்த பகுதியில் உள்ள பெருமளவிலான தோட்டப்புற மக்கள் இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றியிருந்தனர். தமது வேலையை விட்டு மிக நீண்ட தூரம் சென்று பெற்றுக்கொள்ள வேண்டிய சேவைகளை மக்கள் தமது ஊரிலையே பெற்றுக்கொள்ள கிடைத்தமையிட்டு மிக திருப்தியடைந்ததுடன் இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தமது நன்றியையும் தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -