கல்முனை மாநகர சபையில் ஆயிரக்கணக்கில் சோலை வரி செலுத்த கோரும் அதிகாரிகள்..!

முபாரக்-

தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபையில் நீர் இணைப்பை பெற்றுக்கொள்ள வீதியில் குழி தோண்ட, கல்முனை,சாய்ந்தமருது, பாண்டிருப்பு, நீலாவனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, போன்ற கல்முனை மாநகர சபைக்குட்பட்டபிரதேசங்களில் இருந்து அனுமதி பெறும் நோக்கோடு வரும் பொதுமக்களிடம் சோலைவரி இலக்கத்தை கேட்டும்அவிலக்கத்தை அறியாத அப்பாவி பொது மக்களிடம் பக்கத்து வீட்டுக்கு சென்று இலக்கத்தை பார்த்து வாருங்கள் என்று கல்முனை மாநகரசபை அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைகளை பொதுமக்களிடம் கூறிஅலையவிடுகின்றனர்.

அத்தோடு புதிதாக அல்லது ஒருவர் பெயரில் உள்ள சோலைவரி இலக்கத்தை மற்றவரது பெயருக்கு மாற்றம்செய்வதற்கான விண்ணப்பபடிவம் ஒன்றை வழங்கும் அதிகாரிகள் அதற்கான கட்டணமாக நூறு ரூபாயும்அறவிடுகிறார்கள்.

அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காணி உறுதி உள்ளவரின் பெயருக்கு மாற்ற சம்மந்தப்பட்ட நொத்தாசி அல்லதுசட்டத்தரணியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அதன் பின்னர் கல்முனை இலங்கை வங்கிக்கு முன்னால் உள்ள காணி பதிவுகள் சம்மந்தமாக அலுவலகத்துக்குசென்று அங்கு இரண்டு விண்ணப்பங்கள் தலா நூறு ரூபாய்கள் செலுத்தி பெற்றுக்கொண்டு அவற்றை பூர்த்தி செய்துஅங்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் அடுத்த நாள் அவர்கள் வழங்கும் ஆவணங்களை மீண்டும் கல்முனை மாநகர சபையில் சமர்ப்பிக்கவேண்டும்.

இவ்வாறு இரண்டு, மூன்று நாட்களின் பின்னர் சோலை வரியை கட்ட தயாறாகும் அப்பாவி பொது மக்களிடம்ஆயிரக்கணக்கில் ஒரே தடவையில் செலுத்துமாறும் கோருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மிக சிறிய தொகை செலுத்தவேண்டிய சோலைவரியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்தகாலப்பகுதியில் வசூலிக்காமல் நீர் இணைப்பை பெற வீதியில் குழிதோண்ட அனுமதி பெற வரும் பொது மக்களிடம்பல வருடங்களுக்கான சோலை வரியை மொத்தமாக உடன் செலுத்தினால் மட்டுமே நீர் இணைப்புக்கான அனுமதிவழங்கப்படும் எனக் கூறி மொத்த தொகையினை ஆயிரக்கணக்கில் உடன் செலுத்துமாறு பொதுமக்களைதினிக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை மேயரின் அறிக்கையின் பிரகாரம் பல கோடி சோலை வரி நிலுவைஉள்ளதாக கூறப்பட்டது.

சோலை வரி கட்ட வரும் பொது மக்களை இப்படி அலைய விடுவதுதுடன் பலவருடங்களுக்கான சோலைவரிப்பணத்தை ஒரே தினத்தில் கட்டுமாறும் பணிக்கும் அதிகாரிகளை பொது மக்கள் மிகவும் கடிந்து கொள்வதுடன்உரிய கலப்பகுதிக்குரிய வரியை உரிய அதிகாரிகள் அறவீடு செய்தால் இப்படியான பிர்ச்சினைகளை தீக்கலாம்எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்தவிடயம் தொடர்பாக கல்முனை ஆனையாளர் மற்றும் கல்முனை மேயரின் நடவடிக்கையினை எதிர்பார்க்கின்றனர் பொது மக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -