அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட முன்னாள் சாரண ஆணையாளரும் ஓய்வு பெற்றஅட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளருமானஎம்.ஐ.எம்.முஸ்தபா தீடீர் சுகவீனமுற்ற நிலையில் கல்முனை அஸ்றப்ஞாபகார்த்தவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு விளையாட்டுத்துறை தன்னையும் தன் வாழ்நாளையும்தியாகம் செய்து தற்போதும் கல்முனை பிரதேசத்தின் உதைபந்தாட்டம் , கிறிக்கட் ,மெய்வல்லுனர் மற்றும் சாரணய துறையில் மாணவர்கள் , ஆசிரியர்கள் மத்தியில் பிரபல்யம்பெற்று விளங்கும் எம்.ஐ.எம்.முஸ்தபா தேக ஆரோக்கியம் பெற்று சிறந்த உடல்நலத்துடன்வாழ வேண்டும் என வேண்டி நேறற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கல்லூரி சாரணிய மாணவர்களுக்கான முதலுதவி மற்றும்காயங்களுக்கான சிகிச்சை பற்றிய முகாமில் விசேட பிராத்தனையொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர்பீ.எம்.எம்.பதுறுதீன் , பிரதி அதிபர் ஏ.பி.முஜீன் , உதவி அதிபர் எம்.எச்.எம்.அபுபக்கர் , கிழக்குமாகாண விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவர் டாக்டர் ஏ.எம்.எம்.புஹைம் ,சாரணபொறுப்பாசிரியர்கள் எம்.ஏ.எம்.சலாம் , எம்.எப்.றிஸ்வி ஹாதிம் , ஐ.எம்.உவைஸ் , கே.எம்.தமீம், ஏ.எம்.அப்ராஜ் ரிலா , எம்.எஸ்.எம்.நுபைஸ் , எஸ்.எம்.எம்.றம்ஸான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

