ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது வொலிவேரியன் எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் 2015ம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 06ம் தரவகுப்பு அங்குரார்ப்பண நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றது.
எம்.எஸ் காரியப்பர் வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஏ.நாபித் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமம், கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜலீல், கல்முனை மாநரக சபை உறுப்பினர் ஏ.ஏ.பசீர், சாய்;ந்தமருதுகோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ரஹ்மான், தொழிலதிபர் பொறியியலாளர்ஏ.எம்.ஹிபத்துல் கரீம் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் சித்தியடைந்தமாணவர்களும் பரிசில்கள் நினைவுச் சின்னம் என்பன வழங்கி அதிதிகளினால்கௌரவிக்கப்பட்டனர்.






