முகாவின் தேசியப்பட்டியல் 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டலாம் - ஹக்கீமுக்கு தலையிடி

முகாவின் தேசியப்பட்டியல் சர்ச்சைக்கு விரைவில் தீர்வு எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 26ம் திகதி கூடும் முகாவின் அதிஉயர் பீடக் கூட்டத்தில் புதிய எம்பி யார் என்பது தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக் எம்பியாக நியமனமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

டொக்டர் ஹாபீஸ் எம்பிப் பதவியை இராஜிநாமா செய்ததை அடுத்து ஹக்கீமின் வேலைப்பழுவும் அதிகரித்துள்ளது.

ஹக்கீமை சந்திப்பவர்கள் அனைவருமே அவரிடம் கேட்கும் கேள்வி அடுத்த எம்பி யார் என்பதுதான். அவ்வாறானதொரு கேள்வி நேற்று முன்தினம் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஆதற்கு ஹக்கீம் பின்வருமாறு பதிலளித்தார்”: ‘ முகா மூலம் தேசியப்பட்டியல் எம்பியானவர்கள் அனைவருமே கட்சியை வளர்ப்பதற்கோ, சமுகத்திற்கு ஏதாவது நன்மை செய்வதற்கோ ஒரு துளியளவு முயற்சியையேனும் செய்யவில்லை. மாறாக அவர்கள் , தங்களை மட்டுமே வளர்த்துக் கொண்டுள்ளார்கள்’ என்று கூறி பெரும் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -