க.கிஷாந்தன்-
கொழும்பு கொட்டாவை மற்றும் கம்பஹா பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளாக வந்த ஆறு இளைஞர்களிடம் கஞ்சா போதைபொருள் பக்கட்கள் கினிகத்தேனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
16.01.2016 அன்று பிற்பகல் கினிகத்தேனை நகரில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த கினிகத்தேனை பொலிஸாரால் இந்த அறுவர் பயணித்த வாகனம் தீடிரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்களிடம் கஞ்சா தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த அறுவரையும் கைது செய்த கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் 16.01.2016 அன்று மாலை அட்டன் பதில் நீதவான் எஸ்.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்செய்த பொழுது சந்தேக நபர்களை இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


