தமிழ் மாமன்றம் நடாத்தி வரும் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் நிகழ்வு..!

மிழ் மாமன்றம் மாதம் இரு முறை தொடர்ச்சியாக நடாத்தி வரும், வாசிப்பும் அனுபவப் பகிர்வும் நிகழ்வின், இவ் வருடத்திற்கான முதலாவது நிகழ்வு 09.01.2016 அன்று மாலை 3.00 மணிக்கு வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

வாசிப்பு துறை சார்ந்த ஆர்வலர்கள், மாணவர்கள், இலக்கிய துறை சார் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பலதரப்பட்டோரும் கலந்து கொண்ட நிகழ்வில், முதல் பகிர்வாக, அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய செம்மணி வளையல் எனும் மொழி பெயர்ப்பு நாவல், செ.மதுரகன் அவர்களால் பகிரப்பட்டது. 

காதலை மையப்டுத்திய கதையாக அமைந்திருந்த இந் நாவலில் ஆங்காங்கே சோகங்கள் இழையோடியிருந்தாலும், வாசிக்கும் போது மனதிற்கு இனம் புரியாத ஓர் உணர்வை தருவாதாக அமைவதாக பகிர்வில் குறிப்பிடப்பட்டது. கதையை சிறப்பாக ஆர்வலர்களுக்கு மதுரகன் அவர்கள் கூறி அதிலுள்ள சிறப்புக்கள் பற்றி விபரித்தார்.

மொழி பெயர்ப்பு நாவல்கள் தொடர்ச்சியாக பகிரக்கப்படுகின்றமை வரவேற்க்கத்தக்க விடயம். 

வேற்று மொழி எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களின் படைப்புக்கள் பற்றியும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாக பகிர்வில் கலந்து கொண்ட ஆர்வலர்கள் தெரிவித்தனர். அத்துடன் ஈழத்தின் படைப்புக்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்குமென கருத்து தெரிவித்தனர்.

இரண்டாவது பகிர்வாக, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின், “ஆலாபனை” எனும் கவிதை; தொகுதி, பா.சிலோஜினி அவர்களால் பகிரப்பட்டது. கவி உலகில் மறுக்கவும் மறக்கவும் பட முடியாத ஒருவர் கவிக்கோ. அவரின் ஒவ்வொரு படைப்புக்கும் கவியின் ஆழத்தை நமக்கு உணர்த்தி செல்ல தவறுவதில்லை. அவ்வாறு சிறப்பு மிக்க ஆழமான கவிகள் வாய்ந்த, ஆலாபனைத் தொகுதியிலுள்ள கவிதைகள் சிறப்பாக நயக்கப்பட்டமை குறிப்பிடத்ததக்கது. 

இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஓர் ஆரோக்கியமாக முயற்சியினை தொடர்சியாக மேற்கொண்டுவருவது வரவேற்கத்தக்கதாக இருப்பதாக பகிர்வில் கலந்து கொண்டோர் பாரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆழமான இரண்டு படைப்புக்களின் பகிர்வாக இந் நிகழ்வு அமைந்திருந்தது.

தமிழ் மாமன்றத்தின் இம் மாதத்திற்கான அடுத்த நிகழ்வு, எதிர்வரும் 23ம் திகதி வவுனியா பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெறும். ஆர்வலர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக தமிழ் மான்றத்தின் நிகழ்வுகளின் பயனடையுமாறு தமிழ்மான்றம் அழைப்பு விடுக்கினறது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -