நவமணி அலுவலகம் விஷமிகளால் உடைப்பு..!

பிரோஸ் முஹம்மட் -
ளுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று (சனிக்கிழமை) இரவு இனந்தெரியாத விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த மர்மநபர்கள் சி.சி.ரி.வி.யின் இணைப்பை துண்டித்துவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைப்பதற்கு முயற்சித்துள்ளனர். பூட்டு வலுவாக இருந்த காரணத்தினால் முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மர்மநபர் முகத்தை மூடிக்கொண்டு சி.சி.ரி.வி.யின் இணைப்பை துண்டித்துள்ளதால் ஆள் யாரென்பதை அடையாளம் காணமுடியவில்லை. இதனை பரிசீலித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி இரவுநேரத்தில் நவமணி அலுவலகத்துக்கு மர்மநபர்கள் இருவர் ஆயுதங்களுடன் வந்து சி.சி.ரி.வி. கமெராவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டிவிட்டு சென்றனர்.

2002ஆம் ஆண்டு இனந்தெரியாத விஷமிகளால் நவமணி அலுவலகம் முற்றாக தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இனவாத பிரசாரங்களுக்கு எதிராக நவமணி அடிக்கடி பல செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையிலேய நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -