எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்கிழமை மூதூர் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.இதன் போது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் கீழ் வரும் நிகழ்சி நிரலையும் இணைத்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியாமான ஜே.எம்.லாஹிர் கடிதம் மூலம் கேட்டுள்ளார் மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழுவின் செயலாளரைக் கேட்டுள்ளார்.
இதின் படி " பதினெரு வருடங்களாக சுனாமி அனர்த்ததத்தின் போது சுனாமி வீடுகள் இன்றி இருக்கும் 56 குடும்பங்களின் வீடில்லாப் பிரச்சினை, அதேபோன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றத்தின் போது இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை,
மூதூர் வேதத்தீவு விதவைப் பெண்கள் சம்பந்தமான பிரச்சினை, மூதூர் இரால்குழி மீள்குடியேற்றத் திட்டத்தில் விடுபட்ட மக்களின் பிரச்சினை,
அதேபோன்று மூதூர் புதிய இரால்குழி வீதி, புதிய செட்டி வீதி, நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள விடயம், மூதூர் ஸாபி நகர் வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள விடயம், மூதூர் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்று வருவதற்கும் திசையை அறிவதற்குமாக மூதூர் தக்வா நகர் பகுதியில் கடற்கரையில் வெளிச்சவீடு ஒன்றினை அமைத்தல், மூதூர் கேணிக்காடு வீதியும், பாலமும், நீண்ட காலமாக புனரமைக்கப்படாது உள்ள விடயம்,
மூதூர் வேதநகர் பிரதான வீதி சுற்று வட்டம் அமைக்கக் கோரல், போன்ற கோரிக்கைகள் பிரச்சினைகளையும், பேசுவதற்காக இணைத்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
