தொழில் புரியும் அலுவலகங்களில் ஒற்றுமையாக இருப்பது அவசியம் - பொறியியலாளர் ஜாபிர்

சுலைமான் றாபி-
ரச சேவைகளில் இணைந்து தொழில் புரியும் ஒவ்வொரு ஊழியர்களும் தத்தமது அலுவலகங்களில் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர் தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தினை முன்னிட்டு இன்றைய தினம் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்ற புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வில் ஊழியர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் :

அரச சேவையில் இணைந்து ஊதியம் பெறும் ஒவ்வொருத்தரும், மக்களின் நன்மை கருதி பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டும்.அத்தோடு எங்களால் இந்நாட்டிற்கு ஏதாவது சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் வசிக்கும் பகுதிகளை மையமாக வைத்து சிறந்த சேவைகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்.

அதேபோன்று முழு நாட்டிற்கும் சிறந்த அரச சேவகர்களாக மாற வேண்டும் என்பதோடு, எமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை ஒழுங்கான முறையில் நிறைவேற்ற ஒவ்வொரு அரச உத்தியோகத்தர்களும் 2016ம் ஆண்டு புது வருடத்திலிருந்து திடசங்கற்பம் பூண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -