மயில் மாளிகையில் உள்ள தங்க நீச்சல் குளத்தை ஊடகவியலாளர்கள் பார்வையிட்டனர்..!

தொழிற்கட்சி தலைவரான ஏ.எஸ்.பி. லியனகே அவ்வப்போது பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார். லியனகே தனக்குச் சொந்தமான பீகொக் மாளிகையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க தயாரான போது அவர் மிகவும் பரபரப்பாக பேசப்படும் நபராக மாறினார்.

பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளம் வாஸ்து சாத்திரத்திற்கு அமைய பொருத்தமற்றது என்பதால், மகிந்த ராஜபக்ச தான் குடியேறுவதற்கு முன்னர், நீச்சல் குளத்தை மணல் போட்டு நிரப்பினார். எனினும் ராஜபக்சவுக்கு அந்த மாளிகையில் குடியேறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் மணல் போட்டு மூடப்பட்ட நீச்சல் குளத்தில் தங்கம் மற்றும் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் பேசப்பட்டது.

இது குறித்து லியனகே கடந்த 13 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் விசாரணை நடத்தி உண்மையை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த முறைப்பாட்டுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்காத நிலையில், லியனகே, நீச்சல் தடாகத்தை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஊடகவியலாளர்கள் நேற்று பீகொக் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -