ஆசிரியர்கள் இடமாற்றத்தின் போது விருப்பு வாக்குகளை கருத்தில் கொள்ளாமல் பொது நலன் என்பதை மாத்திரம் கருத்தில் கொண்டு அரசியல் வாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாா்.
சில மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு இடமாற்றம் செய்யும் போது அரசியல் வாதிகள் தடையாக மாறுகின்றனர். அவர்களது பிரதேச மக்களின் நலன்களை மாத்திரமே அவர்கள் கருதுகின்றனர். இதனால் பொது நலன்களை அடைந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
