முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.
தைப்பொங்கலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொங்கல் விழா, நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாவது;
எமது நாட்டில் முட்டாள் சிங்கள பௌத்தர்கள் இருக்கின்றனர். முட்டாள் முஸ்லிம்களும் இருக்கின்றனர். முட்டாள் தமிழர்களும் இருக்கின்றனர். மன்னிக்கவும், அறிவிலியாக செயற்படுவதை நாம் நிறுத்த வேண்டும்.
எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வோம். எமது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்வோம். ஏனையவர்களின் தனித்துவத்திற்கும் மதிப்பளிப்போம். அந்தத் தனித்துவங்களும் மேம்பட இடமளிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தேசமாக நாம் பயணிக்க வேண்டும்.
