அமைச்சர் ஹக்கீம் பாக்கிஸ்தான் பிரதமரிடம் வேண்டுகோள் விடுப்பு..!


ட - கிழக்கு வாழ் முஸ்லிமகளின் மீள் குடியேற்றம் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஆகிவற்றுக்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவாஸ் ஷரீப் நேற்று (6) கண்டி மாநகரின் மஹவலி ரீச் ஹோட்டலில் வைத்து சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் ஹக்கீம் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதில் இலங்கை முஸ்லிமகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவும் கலந்துகொண்டார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -