தவணைக்குச் சமூகமளிக்காதவருக்கு விளக்கமறியல்

எப்.முபாரக்-

 திருகோணமலை கந்தளாயில் வழக்குத்தவணைகளுக்குச் சமூகமளிக்காத ஒருவரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (4)உத்தரவு பிறப்பித்தார். 

 மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கொன்று கந்தளாய் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலே குறித்த சந்தேக நபர் பல வழக்குகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையிலே சந்தேக நபரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (4) காலையில் கைது செய்து நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

 இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -