அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றி - சபீர் மன்சூர் பவுண்டேசன்

இக்பால் அலி-
ரிகாமம் திவுரும்பொல, எதுன்கஹகொடுவ செல்லும் பிரதான பாதை கடந்த 20 வருட காலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது தொடர்பாக பிரதேச வாசிகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியதை அடுத்து தற்போது தீர்வு கிட்டியுள்ளது. 

தற்போதைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக தம் பிரதேச மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதாக சபீர் மன்சூர் பவுண்டேசன் அமைப்பிக் தலைவர் எம். எம். சபீர் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தப் பகுதி மக்கள் படும் சொல்லொண்ணாத் துன்பங்களையும் துயரங்களையும் கடந்த இருபது வருடங்களாக அனுபவித்து வந்ததை தொலைக்காட்சி ஊடாகவும் இணைத்தளங்கள் ஊடாகவும் சுட்டிக் காட்டி இருந்தோம். அந்த வகையில் எங்களுடைய கோரிக்கை கவனத்திற் கொண்டு புதிய நல்லாட்சி அரசாங்கம் எடுத்த முயற்சினால் ருபா 10 கோடி இந்தப் பாதையின் அபிவிருத்திப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதேசவாசிகள் பெருமிதம் அடைவதோடு இதற்காக துணை நின்ற சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அமைப்பின் தலைவர் சபீர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -