பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களை கிழக்கிற்கு அழைக்க நடவடிக்கை - முதலமைச்சர் நஸீர்

எப்.முபாரக்-
ட்டதாரிப் பயிலுநர்களாக நியமனம் வழங்கப்பட்டு கொழும்பு உட்பட கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் நியமிக்கப்பட்டவர்களை மீள கிழக்கு மாகாணத்திலேயே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று புதன்கிழமை (20) தெரிவித்தார்.

கடந்த 12ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிலுநர் நியமனங்களில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகமானவர்களுக்கு கொழும்பு உட்பட வேறு மாகாணங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் மாதாந்த வேதனத்தில் ஒரு வருடத்துக்கு பயிலுநர்களாக கடமையாற்ற வேண்டும் என்றும் பணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் நியமனம் பெற்றவர்களை கிழக்கு மாகாணத்துக்குள் உள்வாங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களினால் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

கிழக்கு மாகாணத்துக்கு வெளியே அதிகமான பட்டதாரிகள் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு பணித்துள்ளேன்.

இவ்வாறு கொழும்பு போன்ற கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை கிழக்கு மாகாணத்துக்குள் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -