கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் மூவர் வரலாற்று சாதனை..!


எம்.வை.அமீர் -
ண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் மூவர் அம்பாறை மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.

கணிதபிரிவில் என்.எம்.சாதிர் மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக பொறியியல் துறைக்கும், 

புதிதாக அரசாங்கத்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் எஸ்.எச்.எம்.சஜாத் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையிலும், 

உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஜே.ரீ.ஹிக்மத் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டு கல்முனை வலயத்திற்கும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் படி பொறியியல் , மருத்துவம், பல் மருத்துவம், மிருக வைத்தியம், விவசாயம், தொழில்நுட் பொறியியல், பௌதீக விஞ்ஞானம், கணணி, கட்டடக்கலை, கலை, வர்த்தக முகாமைத்துவம், வர்த்தகம் ஆகிய பிரிவுகளுக்கு மொத்தமாக 150 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான வரலாற்று பெறுபேறுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்த மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், பகுதித்தலைவர்களுக்கும் கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோஸ்தர்கள், பழைய மாணவர் சங்கம் பிரதிநிதிகள், பழைய மாணவர்சங்க கொழும்பு கிளையினர், பாடசாலை அபிவிருத்தி சங்கம் பிரதிநிதிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்னர்.

க. பொ. த. உயர்தர தொழில்நுட்ப பிரிவு கடந்த 2013 ஆண்டு இக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டு 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சைக்கு முதன்முதலாக மாணவர்கள் தோற்றி இரு மாணவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முதன்நிலை பெற்றுள்ளதுடன் 20 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனைத் தொகுதியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் மட்டுமே உயர்தர தொழில்நுட்ப பிரிவு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பொறியியல் துறை , பொறியியல் தொழில்நுட்ப பிரிவு, உயிரியல் தொழில்நுட்ப பிரிவு ஆகிய மூன்று துறைகளிலும் முதனிலை பெற்று மாவட்ட சாதனை நிநைாட்டிய மாணவர்கனுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், பிரதி கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் ஆகியோர் 2016-01-04ஆம் திகதி கல்லூரிக்கு நேரடியாக வருகை தந்து கல்முனை வலயத்திற்கு பெருமை சேர்த்துதந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதிபரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -