அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா - பிரதம அதிதி அமைச்சர் நஸீர்

 ஏ.எல்.எம்.நபாறுடீன்,றியாஸ் ஆதம்



அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு (21.01.2016 இன்று)  பாடசாலை அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் பிரதம அதிதியாகவும், வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எல்.எம் காசீம் சிறப்பு அதிதியாகவும், விசேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் யு.எம் நியாஸி மௌலவி, ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல் மன்சூர் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்குளும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது தரம் ஒன்றிற்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளினால் ஏடு துவக்கி வைக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் கொளரவிக்கப்பட்டனர். இதன்போது அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ்களாக வெளியாகியுள்ள இப்பாடசாலை மாணவர்கள் இருவரும் அதிதிகளினால்  பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -