மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு - தம்புள்ளையில் சம்பவம்

க.கிஷாந்தன்-
ம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ள பிரதேச பகுதியில் 20.01.2016 அன்று மாலை மரத்திலிருந்து தவறி விழுந்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் எஸ்.எம். கீர்த்திரத்ன 44 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் 40 அடி உயரமான மரம் ஒன்றில் கிளை ஒன்றை வெட்டிக்கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தம்புள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -