முசலி காட்டில் இராணுவ உடையில் அமைச்சர் ரிஷாத் மரம் கடத்தினாரா...?

ஏ.எச்..சித்தீக் காரியப்பர்-

முசலி கஜுவத்தை இராணுவ முகாமைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. மன்னார் மாவட்டத்தின் முசலி பகுதி காட்டிலிருந்து எவ்வித அனுமதியும் இன்றி 14 முதிரை மரங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போதே இவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் செய்தி

வில்பத்து விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கொக்கரிக்கும் சில பௌத்த தேரர்களும் சிங்கள கடும் போக்காளர்களும் மற்றும் தங்களை பசுமைப் புரட்சியாளர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் அமைச்சர் ரிஷாத் அந்தப் பிரதேச காடுகளை அழிக்கிறார். மரங்களைக் கடத்துகிறார் என்றெல்லாம் அநியாயமான அபாண்டங்களைச் சுமத்தி வருகின்றனர்.

இப்போது இந்த தேச பக்தர்களும் பசுமைப் புரட்சியாளர்களும் இந்த விடயத்துக்கு என்ன கூறப் போகிறார்கள்?

சில வேளை இராணுவ உடையிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்தான் மரங்களை வெட்டிக் கடத்தினார் என்று கூறுவார்களோ தெரியாது.

ஆனால், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது மட்டும் உண்மை என்தனை இவ்வாறானவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -