நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரம் நிகழ்வு..!

ந.குகதர்சன-
மைதியான, ஒழுக்கமான முழுமையான, சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை ஒன்று சேர்ந்து கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரம் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையானர் கே.ஜெகநாதன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.ஜெனுலாப்தீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட, பிரதேச மட்டங்களில் கலாசார அதிகார சபைகளை பலப்படுத்தும் வகையில் கொடி வாரம் கடந்த 19 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இக் கொடி மற்றும் ஸ்ரிக்கர் விற்பனைகளால் கிடைக்கப்படும் பணத்தில் கலாசார அதிகார சபையினை பலப்படுத்துதல், கலாசார அலுவல்களின் செயற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபர், திணைக்களத் தலைவர்களுக்கு கொடிகள், மற்றும் ஸ்ரிக்கர்கள் வழங்கப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -