சுவிட்சர்லாந்தில் கத்தார் நாட்டின் முன்னாள் மன்னரின் தாராளம்..!

சுவிட்சர்லாந்து நாட்டில் கால் முறிவு சிகிச்சைக்காக சேவை செய்த மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் கத்தார் நாட்டு முன்னாள் மன்னர் 3,000 பிராங்க் ‘டிப்ஸ்’ கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

3,000 பிராங்க் இன்றைய (22.02.2016) இலங்கை பெறுமதியில் 4 இலட்சத்து 41 ஆயிரம் ஆகும்.

கத்தார் நாட்டு முன்னாள் மன்னரான Sheikh Hamad bin Khalifa Al Thani மோரோக்கோ நாட்டிற்கு சுற்றுப்பயணமாக கடந்த டிசம்பர் மாதம் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விபத்தில் அவரது காலில் முறிவு ஏற்பட்டு அவசரமாக சுவிட்சர்லாந்த் நாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

சூரிச்சில் உள்ள Schulthess என்ற மருத்துவமனையில் வாரக்கணக்கில் சிகிச்சை பெற்ற முன்னாள் மன்னர் சில தினங்களுக்கு முன்னர் தான் தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஆனால், முன்னாள் மன்னர் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக தனது சிகிச்சைக்கு உதவிய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3,000 பிராங்க் ‘டிப்ஸ்’ (Tips) கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதனை மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரியா ரிட்ஸ் உறுதி செய்துள்ளார்.

ஆண்டிரியா கூறியபோது ‘பொதுவாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு உதவும் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 20 முதல் 50 பிராங்க்குகள் டிப்ஸ் கிடைக்கும்.

ஆனால், மருத்துவமனை வரலாற்றில் முதன் முறையாக கத்தார் நாட்டு முன்னாள் மன்னர் ஒவ்வொருவருக்கும் 3,000 பிராங்குகள் வரை டிப்ஸ் கொடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

எனினும், இது மருத்துவமனை கொள்கைகளுக்கு எதிரானது என்பதால், ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 150 பிராங்க் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகை மருத்துவமனையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆண்ட்ரியா ரிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -