மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள்> மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் அமைச்சர் ப. திகாம்பரம் தலைமையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மலையக தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
மேற்படி விழாவில் அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பிரதம அதிதியாக கலந்துகொள்வார். விN ~ட அதிதிகளாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க> தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்> கல்வி இராஜாசங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன்> வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் திருமதி. தலதா அதுகோரள> சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி. சந்திராணி பண்டார> நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் றுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ> பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. அரவிந்தகுமார்> வடிவேல் சுரேஸ்> கண்டி பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங் பொன்னையா> சரஸ்வதி சிவகுரு> ஆர். இராஜாராம்> எம். உதயகுமார பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி> அமைச்சின் ஆலோசகர் எம். வாமதேவன் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.
விழாவின் முக்கிய அம்சமாக முற்பகல் 10.00 மணிக்கு அமைச்சர் ப. திகாம்பரம் தலைமையில் அட்டன் டன்பார் மைதானத்தில் சூரியப் பொங்கல் நிகழ்வு இடம்பெறும் இதில் விருந்தினர் பலரும் கலந்து சிறப்பிப்பார்கள்.
விழாவில் விN~ட அம்சமாக தமிழ் நாட்டிருந்து வருகை தரும் கலைஞர்களின் மேளக் கச்சேரி இடம்பெறும் அத்தோடு வரவேற்பு நடனம்> பரத நாட்டியம் மற்றும் மலையக பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்சிகளும் இடம்பெறும்
பிற்பகல் 2.00 மணிக்கு தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர். சந்திரசேகரன் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கிராமம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்படும்.
விழாவில் கலந்து கொள்ள வருகிறவர்களின் வசதி கருதி விN~ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்> விழாவை சிறப்பிக்க அனைவரும் தருமாறும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள்> மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடக பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

