ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டுப் பூர்த்தி - நாடு பூராகவும் நிகழ்வுகள் (இணைப்பு)


ஜனாதிபதியின் பதவியேற்று ஓராண்டுப் பூர்த்தியை சிறப்பிக்கும் வகையில் மரநடுகை நிகழ்வு திருக்கோவில் வலையக்கல்வி அலுவலகத்தில்


எம்.ஜே.எம்.முஜாஹித்-

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாகப் பதிவியேற்று ஓராண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையில் நாடளாவிய மரநடுகை நிகழ்வு இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக திருக்கோவில் வலையக் கல்வி அலுவலகத்தில் திருக்கோவில் வலையக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் 08.01.2016ம் திகதி காலை சுப நேரத்தில் வலையக் கல்வி அலுவலகத்தின் ஊழியர்கள் சகிதம் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டது.







 கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட  நிகழ்வு

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் புர்த்தியாவதனை முன்னிட்டு நேற்று ( 8 ) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உரையாற்றுவதனையும் அதிபர் உள்ளிட்ட மாணவர்கள் , ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளை நாட்டி வைப்பதனை படங்களில் காணலாம். 




நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மலையகத்தில் விசேட வழிபாடுகள்

க.கிஷாந்தன்-

நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மலையகத்தில் அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜைகள் 08.01.2016 அன்று காலை இடம்பெற்றது. கினிகத்தேனை பிரதேச செயலக ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விசேட பூஜையில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் கினிகத்தேனை பிரதேச செயலக சேவையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

இலங்கை சோசலிச குடியரசு நாட்டின் நல்லாட்சி அரசின் மான்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்நாட்டின் அபிவிருத்தி மாற்றத்திற்கு உந்துசக்தியான தலைவராக உலக நாடுகள் போற்றவல்ல கூடிய மாபெரும் மனிதராக நோய்நொடியின்றி வாழவும் இவ்வாண்டில் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாக வேண்டும் எனவும் நல்லாசி வேண்டி இந்த பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவிக்கையில்..

மான்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இலங்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட ஒரு மாமனிதர். மக்கள் அபிவிருத்தி தொடக்கம் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு மாற்றத்தினை உருவாக்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நீடுழி வாழ இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை கொண்டாடும் நாம் நீண்ட கால அபிவிருத்தியில் பின்தங்கி இருந்த மலையக மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் இவ் அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

இதனடிப்டையில் புதிய தனி வீடு அமைப்புகள், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சலுகைகள் கல்வி அபிவிருத்தி, வீதிகள் அபிவிருத்தி என ஒரு புதிய மாற்றத்தினை இவ் ஒரு வருட காலத்தில் செயலாற்றுவதற்கு ஏகப்பட்ட நிதியினை வரவு செலவு திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு எதிர்காலத்தில் இவ் பணிகள் நல்ல முறையில் நடந்தேர வாய்ப்புகளை உருவாக்கிய இவ் அரசாங்கத்திற்கு எந்த பிளவுகளும் ஏற்படக்கூடாது என்பதினை இங்கு தெரிவிக்கின்றேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற மாபெரும் சக்தியை அமைத்து அதற்கு புதிய வலுவூட்டிய இந்த நல்லாட்சி அரசாங்கம் நீண்ட கால ஆட்சியினை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



துருக்கி நாட்டைப்போல் எமது நாட்டையும் பொருளாதார ரீதியில் முயற்சி செய்யும் நோக்கில் எமது நாட்டின் ஜனாதிபதி



அபு அலா, ஏ.ஆர்.எம்.றிம்ஸான் -

துருக்கி நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் எவரும் அரச சொத்துக்களில் கையாடுவதில்லை என அந்நாட்டின் ஜனாதிபதி ரஜப் தையுப் அர்த்துக்கான் தெரிவித்துள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் கடமைநேர வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.பி.ரஜீஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஒரு வருட பதவியெற்பு நிகழ்வை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் ஆலோசனைக்கமைவாக இன்று காலை (08) இடம்பெற்ற மரநடுகை நிகழ்வின்போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

துருக்கி நாட்டிலுள்ள ஜனாதிபதி மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அரச சொத்துக்களையும் அந்நாட்டின் பொருளாதார வளங்களிலும் எந்தவித கையாடல்களையும் வைப்பதில்லை. இதனால் அந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய முன்னெற்றங்களை கண்டு வருகின்றது.
அந்த நாட்டைப்போல் எமது நாட்டையும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையவைக்கும் முயற்சியில் எமது நாட்டின் ஜனாதிபதியும் பாரிய முயற்சியில் ஈடுபட்டு தீவிர கவனமும் செலுத்தி வருகின்றார்.

அந்தவகையில், எமது நாட்டின் ஜனாதிபதி பதவியெற்று ஒரு வருட காலத்துக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அவரின் பதவிக்காலம் முடிவுரும் தருவாயில் எமது நாடும் துருக்கி நாட்டைப்போல் பொருளாதார வளர்ச்சியில் பாரிய முன்னடைவைக்காணும் நிலைமை ஏற்படும். அதற்கான பொறுப்புக்களை இலங்கையிலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களுடன் பொதுமக்களும் இணைந்து செயற்படல்வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், வைத்தியசாலை தொற்றா நோய்ப்பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.எப்.நப்தா, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



கண்டி நகரிலுள்ள கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா 

இக்பால் அலி-

கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தினுடன் கண்டி நகரிலுள்ள கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா ஆகிய சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  ஒரு வருட பதவியேற்பு பிரமாணத்தை முன்னிட்டு இன்று கண்டி மலே ஜும்ஆப் பள்ளிவாசலில்  ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் 08-01-2016 நடைபெற்றது.


கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் கே. ஆர். ஏ. சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் உமர்தீன்  உரையாற்றுவதையும்சிறப்பு அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபீர் ஹாஜியார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விசேட துஆப் பிரார்த்தனையை கண்டி மீராமக்காம் பள்ளிவாசலின் பிரதான இமாம் அஷ்ஷேய்க் அஷ;ரப் நிகழ்த்தினார். இதில் உலமாக்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (பானகமுவ நிருபர்)






அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில்

அய்ஷத் ஸெய்னி-


அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு சமய வழிபாடும் மரம் நடுகை நிகழ்வும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான் தலைமையில் இன்று(08) இடம் பெற்றது.








அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் 
எம்.ஏ.றமீஸ்-

லங்கையில் ஜனநாயக ஆட்சி மலர்ந்து ஓராண்டு பூர்த்தியினையொட்டி அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர்-ரஹீமியா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம அதிபர் ஏ.எல்.செய்னுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது போது விவசாய அமைச்சரினர் இணைப்பாளர் எஸ்.லாபீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக அஷ்-ஷேய்க் ஏ.எம்.அக்றம் மௌலவி  கலந்து கொண்டதுடன்இ வித்தியாலய பிரதி அதிபர்இ ஆசிரியர்கள்இ பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது நிகழ்வின் நினைவாக விவசாய அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.லாபீர் மரக்கன்று நட்டு வைத்ததனைத் தொடர்ந்து அதிதிகள் பாடசாலை  வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இதன்போது இனிப்பு வழங்கப்பட்டதுடன்இ விவசாய அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.லாபீர் அதிபரிடம் பாடசாலைக்கான மின்விசிறி உள்ளிட்ட காரியாலய பாவனை உபகரணங்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  உரையாற்றிய விவசாய அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.லாபீர் குறிப்பிடுகையில். இந்நாட்டில் கடந்த காலங்களில் அடக்கு முறையுடனான கொடுக்கோல் ஆட்சி நிலவியது. அவ் ஆட்சியினை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆந் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்டது. 

இந்நாட்டில் நல்லாட்சி தோற்றுவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மக்கள் விரும்பி இடத்திற்கு பயணிப்பதற்கும் சுதந்திரமாய் நடமாடுவதற்கும் சூழல் தோற்றுவிக்கப்பட்டதற்கு முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றார்.







 சம்மாந்துறை பொதுமக்களும்,பிரதேச செயலகமும் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்த சமய நிகழ்வு

யு. எல். எம். றியாஸ்
நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தியை ஒட்டி இன்று அம்பாறை மாவட்டத்தில் சமய நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன சம்மாந்துறை பொதுமக்களும்,பிரதேச செயலகமும் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்த சமய நிகழ்வும் பழ மரக் கன்று நடும் வைபவமும் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளிலும் இடம்பெற்றது.

இதன் பிரதான சமய நிகழ்வும் பழ மரக் கன்று நடும் வைபவமும் இன்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும் ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், மஜ்லிஸ் அஸ்சூரா,உலமா சபை, ஆகிய உயர் சபைகளின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற சமய நிகழ்வில் விசேட துஆ பிராத்தனையை மௌலவி றம்சின் காரியப்பர் நிகழ்த்தினார். இன் நிகழ்வில் பொதுமக்கள்,பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், மஜ்லிஸ் அஸ்சூரா,உலமா சபை, தலைவர்கள் பிரதிநிதிகள் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்.




 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்  

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியானதையிட்டு நாடுபூராவும் சமய நிகழ்வுகளும், மரநடுகை நிகழ்வுகளும் இடம் பெற்றன. 

இந்த வகையில் இன்று (08) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அதன் பணிப்பாள் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் தேசியக் கொடியேற்றி, அலுவலர்கள் தேசிய கீதமிசைத்த பின்னர் பணிப்பாளர் தலைமையில் திணைக்கள வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





தர்ஜுமில்லத்-
பொத்துவில் பிரதேச சபையில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள்பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் மத அனுஸ்டானம் மற்றும்தேசிய மரநடுகை திட்டம்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியைமுன்னிட்டு இடம்பெறும் மத அனுஸ்டானம் மற்றும் தேசிய மரநடுகை திட்டம் இன்று(2016.01.08) பொத்துவில் பிரதேச சபையில் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.பி.மீராமுகைதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமயப் பெரியார்கள், திணைக்களத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும்உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என்போர் கலந்துகொண்டனர்

இந் நிகழ்வில் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நலன் வேண்டி மத அனுஸ்டானம் இடம்பெற்றதுடன், பிரதேச சபைக; காரியாலயத்திலும் காரியாலயத்தில் மரம்நடப்பட்டதுடன், பிரதான சந்தைக் கட்டிட முன்பகுதி, நிலநிரப்புத்தளம், தவிசாளர் சிறுவர் பூங்கா, களப்புக்கட்டு சிறுவர் பூங்கா, றசாக் மௌலான நகர் சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் மரம் நடப்பட்டது.




அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால்  

நிஸ்மி.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆரம்பித்த நல்லாட்சிக்கு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி வேண்டி நடாத்தப்படும் மத வைபவங்களும், மர நடுகை நிகழ்வும் இன்று (08) அம்பாரை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இத் திட்டத்திற்கு அமைவாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான வைபவம்  பிரதேச செயலலக முன்றலில் உதவிப் பிரதேச செயலாளர் அஷ்- ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம், ஏ.எல்.ஹுஸைனுதீன், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், கணக்காளர் எம்.ஐ..எம்.முஸ்தபா, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.எம்.இமாமுதீன் உட்பட பிரதேச செயலக சகல பதவி நிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உதவிப் பிரதேச செயலாளர் அஷ்- ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நல்லாட்சியின் சிறப்பு பற்றி உரையாற்றினார். அத்துடன் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வாயல் பேஷ்-இமாம் எம்.ஐ.எம்.பைஸல் அவர்களினால் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்டதுடன் மர நடுகை வேலைத் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம், ஏ.எல்.ஹுஸைனுதீன், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறூக், கணக்காளர் எம்.ஐ..எம்.முஸ்தபா, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.எம்.இமாமுதீன் ஆகியோர்களும் மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர். 







"நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தி" நிகழ்வு நிந்தவூர் மாவட்டதொழிற்பயிற்சி நிலையத்தில்

- நாசிறூன்- 
இன்று 2016.01.08 நிந்தவூர் மாவட்டதொழிற்பயிற்சி நிலையத்தில் நல்லாட்சிக்கான ஒரு வருட பூர்த்தி நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மதகுருமார்கள் உட்பட நிலையத்தின் உதவிப்பனிப்பாளர்கலான திரு. வீ. கனசுந்தரம், திரு. ரீ. விநோதராஜா உட்பட நிலையத்தின் போதனாசிரியர்கள் பயிலுனர்கள் என பலர் கலந்து கொண்டதோடு நல்லாட்சி அமையப்பெற்று ஒரு வருட பூர்த்தி நாளை நினைவு கூறும் வகையில் இரண்டு மரக்கன்றுகள் மதகுருமார்களாலும் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர்களாலும்   நடப்பட்டதோடு அதிதிகளால் விஷேட உரையும் இடம்பெற்றது 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -