நல்லாட்சியின் ஓராண்டு நிறைவு - நாளை நிந்தவூரில் விஷேட துஆ பிரார்த்தனை..!

சுலைமான் றாபி-
டந்த ஆண்டு இந்நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சின் பின்னர் நிலவி வரும் நல்லாட்சிக்கு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு நாளை (08) ஜும்மா தொழுகையினைத்தொடர்ந்து நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலில் விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம். றசீன் தெரிவித்தார்.

இதேவேளை இத்துஆ பிரார்த்தனை நிகழ்வின் போது இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பொதுமக்களிடத்தில் சமாதானம், நல்லிணக்கம் என்பவைகள் தொடர்ந்தும் நிலவ பிரார்த்திப்பதோடு, இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் சௌபாக்கியங்களுக்காக இப்பிராத்தனை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -