சுத்தமான பாடசாலையும் ஆரோக்கியமான மாணவர்களும்..!

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த ’2016 சுத்தமான பாடசாலையும் ஆரோக்கியமான மாணவர்களும்’ எனும் தொனிப்பொருளிலான சிரமதானப் பணி இன்று 7 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிரமதான பணியில் கல்லூரி மாணவர்களின் பெற்றோர், பழைய மாணவர்கள், கல்முனை பொலிஸார், கல்லூரிமாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் ஈடுபட்டனர்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் இக் கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் இச்சிரமதானப் பணியில் கலந்து கொண்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -