றியாஸ் ஆதம்-
தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தல் தேசிய வாரத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் (27.01.2016) இன்று அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எம் இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவட்ட வைத்திய அதிகாரியினால் தேக ஆரோக்கியம் தொடர்பாக விரிவாக உரை நிகழ்த்தப்பட்டதுடன் உடற்பயிற்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகமும், அட்டாளைச்சேனை அந்-நூர் மாகா வித்தியாலயமும் இணைந்து நடாத்திய உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் (26.01.2016) நேற்று அந்-நூர் மாகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.கே முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி, அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எம் இஸ்மாயீல் மற்றும் ஆசிரியர்களும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட உடற்பயிற்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.







