ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இலங்கை ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பதவிக்கால நிறைவையொட்டி எதிர் வரும் 8ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அரச நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் மர நடுகை நிகழ்வுகளை நடாத்துமாறு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அமைச்சின் செயலாளரூடாக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
மேற்படி அறிவித்தலுக்கமைவாக திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் சகல பள்ளிவாசல்களுக்கும் கடிதமூலம் நாட்டின் சாந்தி, சமாதானத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் துஆ பிரார்த்தனை மேற்கொண்டு பள்ளிவாசல் வளாகத்தில் மரக் கன்று நடுகைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியிருக்கின்றார்.
