சம்மாந்துறையில் 130 விவசாய பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

எம்.எம்.ஜபீர்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து சம்மாந்துறை பிரதேச விவசாய பிரதிநிதிகள் சங்கத்திலுள்ள 130 விவசாய பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிட தொகுதி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சம்மாந்துறை விவசாய பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சீனிமுஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கிருமிநாசினி தெளிகருவிகள், மண்வெட்டிகள் போன்ற உபகரணங்களை கையளித்தார்.

இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஹம்ஸார், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் எம்.ஐ.அப்துல் காதர், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், வட்டவிதானைமார்கள், விவசாயிகள், பயனாளிகள், பொது மக்கள், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -