முன் பள்ளி ஆசிரியர்களின் பணிக்குப் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - தவம் MPC

 நிஸ்மி-
மாணவர்களின் உயர்ச்சி ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் கூட்டுப் பொறுப்பிலேயே தங்கியுள்ளது. எமது சிறார்களை நாட்டிற்கும், சமூகத்திற்கும் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் புடம் போடும் எமது முன் பள்ளி ஆசிரியர்களின் பணிக்குப் பெற்றோர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று றெயின்போ கல்லூரியின் முன் பள்ளி மாணவர்களின் விடுகை விழாவும், பரிசளிப்பு வைபமும் நேற்று (05) சனிக்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதாஉல்லா கலையகத்தில் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எஸ்.ஹஸ்பி தலைமையில் இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வெற்றி விருது, பரிசு மற்றும்;, சான்றிதழ்களையும் வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

றெயின்போ கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எஸ்.ஹஸ்பி தலைமையில் ரெயின் ட்ரொப் - மழைத் துளி என்ற தொனிப் பொருளில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆரம்பக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.ரி.ஜமால்தீன், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.தௌபீக், பிரதேச செயலக நிதி உதவியாளர் எம்.எச்.ஜெய்னி, முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.மீராசாஹிப், ஆசிரியர் எம்.எம்.நிஸாம்,முன் பள்ளி அபிவிருத்திப் பணியகத்தின் உத்தியோகத்தர் முன் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -