அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு - சுகாதார அமைச்சர் மற்றும் தவம் MPC

அபுஅலா –
ட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் 50 ஆயிரம் ரூபா நிதியை அவரின் 2015 ஆம் ஆண்டுடின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக கழகத்தின் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் இன்று (13) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழக அங்கிகள் இல்லாத குறையை கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் எடுத்துக்கூறியபோது அந்தக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதாக அமைச்சர் வாக்குறுதியை வழங்கியமைக்கு அமைவாக இந்த நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளதாகவும் தெவித்தார்.

இதேவேளை, கழகத்தின் உதைபந்தாட்ட குழுவினரின் வளர்ச்சிக்காகவேண்டி கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மு.காவின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை செயலாளர் ஏ.எல்.தவம் ரூபா 25 ஆயிரத்தை அவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் உறுப்பினர் எ.எல்.தவம் ஆகியோர்களுக்கு நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் வீரர்கள் என்றும் நன்றியுள்ளவர்களாகவும், அவர்களுகளின் அரசியல் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவார்கள் எனவும் கழகத்தின் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -