மூன்றாவது ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி அதிரடி வெற்றி..!

லங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக கேன் வில்லியம்ஸன் 59 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திலகரட்ன தில்ஷான் 91 
ஓட்டங்களையும், லஹிரு திரிமன்னே ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -