ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா இன்று காலை நடைபெற்றது.
நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் சமகால அரசியல் எதிரிகளாக மாறியுள்ள ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நீண்டகால நாட்களுக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இதன்போது ராஜபக்ஷ குடும்பத்தை கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர் ராஜித சேனாரட்னவும் உடனிருந்தார்.
இலங்கையில் ராஜபக்ஷ ரெஜிமென்டால் முன்னெடுக்கப்பட்டு வந்த சர்வதிகார ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்ததன் காரணமாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தோற்கடிக்கப்பட்டார்.
எனினும் அண்மைக்காலமாக தேசிய அரசாங்கத்தின் உயர்மட்ட நிகழ்வுகளில் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் முன்னயை ஆட்சியில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கலந்து கொள்வது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களை ஏற்பத்தியுள்ளது.
கடந்த 28ம் திகதி நீர்கொழும்பில் நடைபெற்ற பொது நிகழ்வில், பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
கோத்தபாய மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் சமயத்தில், அவர் சுகந்திரமாக பொது நிகழ்வுகளில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ராஜபக்ஷ ரெஜிமென்டை பாதுகாக்க தேசிய அரசாங்கம் முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்.




