முஸ்லிம்கள் பற்றி அமைச்சா் ராஜித்தவின் சூடான கருத்து..!

அஷ்ரப் ஏ சமத்-
வாராந்த அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு 10ஆம் திகதி மு.பகல் 11.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைச்சா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினாவின் தலைமையில் நடைபெற்றது.

இங்கு ஊடகவியலாளா் ஒருவா் கேட்ட கேள்வி - 

அமைச்சா் றிசாத் பதியுத்தீனால் வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்படுகின்றனா் அது பற்றி அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? இதனை நீங்கள் அறிவீா்களா ? 

அமைச்சா் டொக்டா் ராஜித்த பதில் - 

அவ்வாறு அந்த அமைச்சா் அங்கு செய்யவில்லை. வில்பத்து பிரதேசத்தில் ஒரு அங்குல நிலமுத்தில் கூட முஸ்லீம்கள் மீள் குடியேறி காட்டை அழிக்கவில்லை. அந்த மக்கள் அப்பாவிகள் விடுதலைப்புலிகள் அவா்களை அன்று விரட்டியபோது இன்னும் அந்த மக்கள் புத்தளத்திலேயே தற்காலிகமாக வாழ்கின்றனா். நானும் காணி அமைச்சராக இருந்துள்ளேன். 

அப்போதும் இது போன்று இரத்தினபுரி வனாந்தரத்தில் மக்கள் குடியேறியதாக ஒரு பிரச்சினை உள்ளது. அமைச்சரவைக்கு சூழல் வன ஜீவ அதிகாரிகளினால் சமா்ப்பித்த அறிக்கையில் வில்பத்து காணியில் முஸ்லீம்கள் குடியேறியதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. 

அவா்கள் முஸ்லீம்கள் என்றதற்காக இனரீதியாக சிந்திக்க வேண்டாம்.

அமைச்சா் அவா்களே நீங்கள் அவன்காட் நிறுவனத்தினடம் பணம் பெற்றுள்ளீா்களா? 

அமைச்சா் - அப்படியானால் நிறுவியுங்கள் 

அவன்காட் நிறுவனத்தின் நிதியில் - சரத்பொண்சேகா - அமைச்சா் விஜயதாச ராஜபக்ச ஆகியோா் அவன்காட் சம்பந்தமாக உல்லாசமாக வெளிநாடு சென்ற புகைப்படங்கள் பத்திரிகையில் வெளிவந்துள்ளதே - இது பற்றிய இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா் விஜயாதாச கருத்துக்கள் வெளியிட்டாரா ?

அமைச்சா் - 

அவா் கருத்து வெளியிட வில்லை மவ்பிம பத்திரிகைதானே இதனை வெளியிடுகின்றாா்கள். அந்த பத்திரிகை முதல் பக்கத்தில் வைத்தியா்கள் வேலை நிறுத்தம் செய்தால் முன்பக்கமும் முழுப் பக்கமும் படமும் செய்தியும் எழுதுகீறீா்கள் தானே.

அமைச்சரவை தீா்மாணங்கள்

சீன துறைமுகம புகையிரத நிலையம் தொட்டு மாகோ வரையிலான புகையிரத நிலையங்கள் கோல்சிம் கம்பணி ஊடகா அபிவிருத்தி செய்யப்படும். நகரங்கள் உப நகரங்கள் பஸ் நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் பொதுவசதிகள் செய்து கொள்ளப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் 150 மில்லியன். ஹிங்குராகொட 60 மி்ல்லியன் மெதரஹிரிய 25 மில்லியன் கதுருவெல 40 மில்லியன் அரங்வில் 05 மில்லியன் மோட்டாா் தி னைக்களத்தில் 60 இலட்சம் வாகணங்களது தஸ்தவேஜூகளை ஆவணப்படுத்த புதிய கட்டிடம் நிர்மாணித்தல். பொத்துகர- கலகெதர அதி வேக பாதை 111 ஆம் கட்டம் நிர்மாணித்தல். வைத்தியசாலைகளில் 93 இரத்த வங்கி அமைப்பதற்கு திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் மற்றும் பெண்களுக்கான இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மகளிா் அமைச்சினால் விசேட திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தபபட உ்ள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -