க.கிஷாந்தன்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்வரும் அரசியல் நகர்வு தொடர்பாக காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் கொட்டகலை ஒன்று சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், தோட்ட நிர்வாகத்தால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக ஒன்றுகூடலுக்கு வருகை தந்திருந்த இ.தொ.கா வின் பிரதிநிதிகள், மகளீர் இணைப்பாளர்கள், உபத்தலைவர்கள், மற்றும் அரசியல் பிரதிநிதிகலுடாக பொதுச்செயலாளர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ள சம்பள பேச்சுவார்த்தையின் போது தீர்வு காணப்படும் என பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம். ரமேஸ்வரன், மத்திய மாகண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், கணபதி கனகராஜ், மற்றும் பிரதேச சபை முன்னால் உறுப்பினர்கள். மற்றும் இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.




