முதியோர்கள் எமது முதுசம்கள் அவர்களது அறிவு மற்றும் அனுபவம் என்பன எங்களுக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும். அவர்களின் நலன்களைப் பேண வேண்டியது எமது தலையாய கடமையாகும் என்று தெரிவித்தார்; அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப்.
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதியோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று முன் தினம் (01) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.அன்வர் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார். நிஸ்மி, அக்கரைப்பற்று.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம்.சம்சுதீன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்களான ஏ.எம்.தமீம், ஏ.ஹுஸைனுதீன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.சரீப், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.ஸியாத், முதியோர் மேமபாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.கைஸ் உட்பட ஏராளமான முதியோர்களும் கலந்து கொண்டனர்.
முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்கள் மட்டத்திலும், பாடசாலை மாணவர்களிடையேயும் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுடன் கலந்து கொண்ட அனைத்து முதியோர்களுக்கும் ஆண்களுக்கு சாறமும், பெண்களுக்கு சாறியும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களின் அனுசரணையுடன் இடம் பெற்ற இந் நிகழ்வினை முதியோர் மேம்பாட்டு உததியோகத்தா எம்.ஏ.கைஸ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.



