அரசாங்கத் தகவல் திணைக்களம் பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதில் ஊடகப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்குத் தொடரின் முதலாவது கருத்தரங்கு கொழும்பு நகர்ப்புற தமிழ் பாடசாலை மாணவர்களுக்களின் பங்குபற்றலுடன் நேற்று (02) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி எச்.டீ.எஸ். மல்காந்தி அவர்களும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். சேந்தில் வேலர் அவர்களும் தினகரன் பத்திரிகையின் முன்னால் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன், நவமனி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் அவர்களும் கொண்டனர்.
இக்கருத்தரங்கின் விரிவுரையாளர்களாக நவமனி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் எஸ். மோசேஸ், தினகரன் பத்திரிகையின் முன்னால் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன், தேசிய கல்வி நிர்வனத்தின் முன்னால் பிரதம செயற்றிட்ட அதிகாரி எம்.எச்.எம். ஹசன் ஆகியோர் குறித்த கருத்தரங்கில் கலந்து விரிவுரைகளை நடாத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -